இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை : அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை

Must read

சென்னை

ன்று உலகெங்கும் உள்ள கிறித்துவர்கள் ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தைப் பண்டிகையாகக் கொண்டாடி வருகின்றனர்.

கிறித்துவ மதத்தை உருவாக்கியவரான ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினம் ஒவ்வொரு கிறித்துவருக்கும் முக்கியமான தினமாகும்.   கிறிஸ்துமஸ் என்னும் இந்த தினத்தை உலகெங்கும் உள்ள கிறித்துவர்கள் பண்டிகையாகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.    உலகில் பல தேவாலயங்களில் கிறிஸ்துமஸை ஒட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

ரோம் நகர் அருகில் உள்ள கத்தோலிக்க கிறித்துவத்தின் தலைமையிடமாக விளங்கும் வாடிகனில் கிறிஸ்துமஸ் மரங்கள், குடில்கள் நிறைந்து அந்த நகரமே வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது   உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் குவிந்து கத்தோலிக்க மத குருவான போப்பாண்டவரின் சிறப்புப் பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய கேரள மாநிலத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இரவு தேவாலயங்கள்  மாநிலம் எங்கும் உள்ள மக்கள் ஆங்காங்கே உள்ள தேவாலயங்களுக்கு சென்று நள்ளிரவில் சிறப்பு திருப்பலி, மற்றும் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

இதைப் போல் ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், மற்றும் டில்லி ஆகிய இடங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள மக்கள் தங்களது வீடுகளில் குடில்களை அமைத்து குழந்தை இயேசுவை வழிப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பேராலய அதிபர் கிறிஸ்துமஸ் தின நற்செய்தியை வாசித்தார்.  பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியர் பேராலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சென்னை நகரில் உள்ள சாந்தோம், சின்னமலை, பெசன்ட்நகர் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களும் மின்னொளியில் ஜொலித்தன.   நேற்று  நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று குழந்தை இயேசுவை வழிப்பட்டனர்.

இதைப் போல் சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் மலை மேல் உள்ள தேவாலயம் மற்றும் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தூய ஆரோக்கியநாதர் ஆலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

More articles

Latest article