இனி ஆந்திராவில் ‘கூகுல் எக்ஸ்’தான்: சொல்கிறார் சந்திரபாபு நாயுடு!

Must read

 

Naidu woos Google X to Andhra Pradesh

 

இணைய உலகைக் கட்டிப்போட்டிருக்கும் கூகுலின் நவீன வெர்சனான கூகுல் எக்ஸ்-ஐ பயன்படுத்த ஆந்திர மாநிலம் தயாராகி வருகிறது. அமெரிக்கா சென்றுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கூகுல் எக்ஸ் தொடர்பான பரிசோதனை முயற்சிகளை நேரிலேயே கண்டறிந்தார். கூகுல் எக்ஸ் என்ற அதி நவீன வெர்சனின் பயன்பாடுகள் குறித்து கூகுல் நிறுவன அதிகாரிகள் அவருக்கு விளக்கினர்.

குறிப்பாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கார், இன்டர்நெட் இணைப்பில்லாத பகுதிகளிலும் நவீன பலூன்கள் மூலம் சேவையை விரிவு படுத்துவது என கூகுல் எக்ஸ்சின் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் குறித்து அவரிடம் விவரிக்கப்பட்டது. கூகுல் நிறுவனத்தின் புதிய முயற்சிகளைப் பார்த்து பாராட்டிய சந்திரபாபு நாயுடு, கூகுல் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு நவீன தொழில்நுட்ப திட்டங்களையும் செயல்படுத்த ஆந்திர அரசு முடிவு செய்திருப்பதாக கூறினார். குறிப்பாக இணைய வசதி இல்லாத கிராமங்களிலும், பலூன்கள் மூலம் அதனை ஏற்படுத்தும் திட்டம் தம்மை கவர்ந்திருப்பதாக கூறினார்.

ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியைக் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சந்திரபாபு நாயுடு, அதன் ஒரு பகுதியாக கடந்த 5ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அங்கு சர்வதேச கட்டுமானப் பணிகளுக்கான ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் இயக்குநர் ரஸ்ஸன் ட்ரிங்கரைச் சந்தித்து, அமராவதி நகரின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

More articles

Latest article