ஸ்லாமாபாத்

ந்தியா தாக்கியதாக கூறப்படும் பாலகோட் பகுதியில் தீவிரமுகாம்கள் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளதற்கு இந்திய தூதர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றது.   அந்த இயக்கத்தின் முகாம்கள் பாலகோட் பகுதியில் உள்ளதாகவும் இது குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்திய விமானப்படை அங்கு தாக்குதல் நடத்தியதாக்வும் இந்தியா தெரிவித்தது.

பாகிஸ்தான் அரசு புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல்கள் குறித்து தங்களுக்கு எவ்வித விவரமும் இல்லை எனவும் அவைகளை இந்தியா அளிக்க வேண்டும்  எனவும் தெரிவித்தது.   இந்தியா இந்த விவரங்கள அடங்கிய ஆவணங்களை பாகிஸ்தான் தூதரிடம் அளித்தது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,”இந்தியா அளித்த ஆவணங்களை எங்கள் அரசு ஆராய்ந்து விசாரணை நடத்தியது.   இந்த ஆவணங்கள் குறிப்பிட்ட இடங்களில் தீவிரவாத முகாம்கள் இயங்கவில்லை.   அந்த ஆவணங்களில் 22 முகாம்கள் இயங்கி வந்ததாக கூறப்படுவது தவறான தகவல் ஆகும்.

நாங்கள் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்தினரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையின் படி மசூத் அசார் உள்ளிட்ட எந்த ஒரு பாகிஸ்தானியருக்கும் புல்வாமா தற்கொலை தாக்குதலில்  சம்மந்தம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.   இதுவும் தவறான தகவல் ஆகும்” என தெரிவித்தார்.

இது குறித்து இந்திய தூதர், “பாகிஸ்தான் சொல்வது தான் தவறான தகவல் ஆகும்.   பாகிஸ்தான் அனேகமாக புல்வாமாவில் நடந்தது பயங்கரவாத தாக்குதலே இல்லை என சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது” என தெரிவித்துள்ளார்.