இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது : மத்திய சுகாதார அமைச்சர்

Must read

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு 100 ஐ தாண்டியதில் இருந்து தினமும் இரு மடங்கான நிலையில் தற்போது பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்

கொரோனா பாதிப்பு 100 ஐ தாண்டிய பிறகு சில தினங்களுக்குத் தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இருமடங்கு ஆனது.  கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மார்ச் 24 முதல் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.   நாட்டில் முககவசம், சானிடைசர், சமூக இடைவெளி ஆகியவை அவசியம் ஆக்கப்பட்டுள்ளது   தற்போது பரவுதல் வேகம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மேல் மட்ட நிலைக் குழு அமைச்சர்கள் கூட்டம் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்  ஹர்ஷ் வர்தன் தலைமையில் நடந்தது.  இந்த கூட்டத்தில் கொரோனாவுக்கு என மாநிலவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனை விவரங்கள், தனிமை படுக்கைகள் மற்றும் வார்டுகள், பிபிஇ உடைகள், என்95 முகக்கவசங்கள், மருந்துகள், வெண்டிலேட்டரக்ள் உள்ளிட்டவை குறித்த விவரம் அளிக்கப்பட்டது.

இது குறித்து சுகாதார அமைச்சர், தற்போது பி பி இ உடைகள், முகக் கவசங்கள் தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.  தற்போது தினசரி ஒரு லட்சம் பி பி இ உடைகள் மற்றும் மற்றும் என் 95 முகக் கவசங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.   இதை தயாரிக்க இந்தியாவில் 104  தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன

தற்போது இறப்பு விகிதம் 3.1% ஆகவும் குணமடைந்தோர் விகிதம் 20%க்கும் அதிகமாகவும் உள்ளது.  மற்ற நாடுகளை விட இது மிகவும் சிறப்பானதாகும்.  இது நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு மூலம் நடந்துள்ளது.  அத்துடன் கொரோனா பாதிப்பு 100ஐ எட்டியதும்  தினசரி இரட்டிப்பாகி வந்தது. தற்போது 9.1 நாட்களில் இரட்டிப்பாகி வருகிறது.” என அறிவித்துள்ளார்.

More articles

Latest article