இந்தத் தேர்தலிலும் இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட சீமான்!

Must read

1
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், இரட்டை இலை சின்னத்துக்கு சீமான் ஓட்டு கேட்டதால்,  அவரது கட்சி வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார்.
வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி, தமிழக்தில் உள்ள, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகம் முழுதும் தேர்தல் பிரச்சாரம் செய்து  வருகிறார்.
இந்த பிரசாரத்தில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வை கடுமையாக விமர்சிக்கும்  சீமான், இரண்டு கட்சிகளையும் தேர்தலில் தோல்வியடைய செய்து, நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என, ஆக்ரோஷமாக பேசி வருகிறார். இந்த நிலையில், ஊத்தங்கரை சட்டசபை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து, ஊத்தங்கரை ரவுண்டனாவில் நடந்த, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
அப்போது தனது உணர்ச்சிகரமான பேச்சை முடித்தவுடன், கடைசியாக  ‘வரும் தேர்தலில், கண்டிப்பாக இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டளிக்க வேண்டும்’ என்றார் ஆவேசமாக.
இதை கேட்ட வேட்பாளரும், கட்சியினரும் கட்சியினரும் அதிர்ச்சியடைந்தனர். பிறகு சுதாரித்து கொண்ட சீமான், இரட்டை மெழுகுவர்த்திக்கு ஓட்டளிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

More articles

1 COMMENT

Latest article