1

ளையராஜாவின் இசையமைக்கும் ஆயிரமாவது படமான “தாரை தப்பட்டை” இசை வெளியீட்டு விழா  நாளை நடக்கிறது.

பொதுவாகவே இளையராஜாவின் இசை வெளியீடு ஏகத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். பாடலைக் கேட்க, ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். அதுவும் ஆயிரமாவது படம் என்றால் சும்மாவா?

அந்தப்படத்தின் இசை வெளியீடு நாளை பிரம்மாண்டமாக.. நடக்கிறது.

ராஜாவின் ரசிகர்கள் அனைவரும் மனம் கொள்ளாத ஆர்வத்துடன் தவமிருக்கிறார்கள்.

இளையராஜாவின் ஸ்பெஷல் ரசிகரான இயக்குநர் பாலாவின் படம் அல்லவா.. இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்திருக்கிறார் அவர்.

ராஜாவின் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நியூஸ்..

கிராமிய கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் தமிழ் நாட்டுப்புற இசைக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

அதோடு, இந்த படத்திலும் மாணிக்கவாசக பெருமனின் திருவாசக பாடல் ஒன்று இடம் பெற்றிருக்கிறதாம்!

திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பார்கள்.. இளையராஜாவின் இசையும் மனதை உருக்கும்.. இரண்டும் சேர்ந்தால்…

ருசிக்க இன்று ஒரு நாள் காத்திருங்கள்  ரசிகர்களே!