இடைத்தேர்தல்: ஒரு தொகுதிக்கு 4 துணை ராணுவப்படை! ராஜேஷ் லக்கானி

Must read

 
சென்னை,
மிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினர் வருகிறார்கள் என்று லக்கானி தெரிவித்தார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்று முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகி உள்ளது.
para
தேர்தல் பாதுகாப்பு குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தொகுதி தேர்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 தொகுதிகளின் தேர்தலுக்கு 12 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க  தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலின் போது ஒரு தொகுதிக்கு ஒரு துணை ராணுவப்படை மட்டுமே பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால்,  தற்போது 3 தொகுதிகளில் தலா ஒரு தொகுதிக்கு 4 துணை ராணுவப்படை பாதுகாப்பு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துணை ராணுவப் படையினர் வாக்குப்பதிவிற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே தமிழகம்  வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

More articles

Latest article