Eat_Healthy_To_Keep_Your_Teeth_Healthy

அழகிய ஆரோக்கியமான பற்கள் வேண்டுவோர் தவிர்க்கவேண்டிய ஆறு உணவு வகைகள் இதோ:
மிட்டாய் – மிட்டாய்களில் அதிக அளவு இனிப்பு இருப்பதால் அது பற்களில் உள்ள துவாரங்களில் பல கிருமிகளை கொண்டு சேர்கிறது.
டீ மற்றும் காபி – டானிக் அசிட் எனப்படும் அமிலம் பற்களின் எனாமிலை பாதித்து கரை படியச் செய்கிறது.
ஊறுகாய் – கூட்டு பொரியல் ஏதேனும் இல்லாவிட்டாலும் பரவா இல்லையென்று, ஊறுகாய் வைத்து சாப்பிடுவோர் பலர் உண்டு. ஊறுகாயில் உள்ள வினிகர் மற்றும் சர்க்கரை கலவை எனாமைலுக்கு அதிக பாதிப்பை கொடுக்கும்.
சிட்ரஸ் பழங்கள் – எழுமிச்சை, எழுமிச்சங்காய் , ஆரஞ்சு மற்றும் கிரேப் ப்ரூட் போன்ற பழ வகைகளில் உள்ள அமிலத்தன்மை பற்களுக்கு அதிக அளவு கேடு விளைவிக்கும். பழங்களை முற்றிலும் தவிர்க்க முடியாது; ஆகையால் முடிந்த வரை இந்த வகை பழங்களைக் குறைவாகச்  சாப்பிடுங்கள்.
சோடா – சோடாவில் உள்ள இனிப்பு , அமிலம், கார்போனேட் பற்களுக்கு சிதைவு உண்டாக்கும்.
ஒயின் – மது வகைகளில் சிவப்பு ஒயின், ஒரு நாளைக்கு ஒரு குவளை குடித்தால் இதயம், மற்றும் உடல் கொழுப்பு சீர் படும் என பல ஆய்வுகள் தெரிவிக்கிறது. இருந்தாலும், ஒயினிலுள்ள அமிலமானது பற்களை கரை படியச் செய்து அழித்துவிடும்.
-ஆதித்யா