aa
 
ஜலாலாபாத்:
ப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய இரு தற்கொலை படைத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.
குன்னாரில் 13 பேர்:
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி மாகாணமான குன்னாரில் தற்கொலை படைத் தாக்குதல் நடந்தது. வெடி பொருட்கள் நிரப்பிய மோட்டார் சைக்கிளை ஆஸாதாபாத் சந்தையில் பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்ததில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
40 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தலிபான் அமைப்புக்கு இந்த தற்கொலை படைத் தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காபூலி 12 பேர்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்  பயங்கரவாதிகள்  நேற்று மாலை நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
காபூலில் உள்ள பாதுகாப்பு அமைச்சக கட்டடத்தின் அருகே சந்தேகப்படும்படியாக வந்த நபரைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த நபர் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை திடீரென வெடிக்கச் செய்தன். இதில்  இரு ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில்ல் நீண்ட காலமாக தலிபான்கள் நடத்தி  வரும் பயங்கரவாதச் செயல்களுக்கு முடிவு கட்டும் வகையில் விரைவில் பேச்சவார்த்தை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் நடந்துள்ள இந்த  தொடர் தற்கொலை படைத் தாக்குதல் பேச்சுவார்த்தையை கேள்விக்குறியாகிவிட்டது.