ஆபத்து இன்னும் முடியவில்லை; எச்சரிக்கையாக இருங்கள்: பாகிஸ்தான் தளபதி

Must read

இஸ்லாமாபாத்: நமக்கான ஆபத்து இன்னும் முடிந்துவிடவில்லை. எனவே, எச்சரிக்கையாக இருந்து செயலாற்றுங்கள் என அந்நாட்டு விமானப் படையினருக்கு, விமானப்படை தளபதி முஜாஹித் அன்வர் கான் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது, “நமக்கான ஆபத்து இன்னும் முடிந்துவிடவில்லை. எதிரி எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். எனவே, நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். சமீபத்தில் ஏற்பட்ட மோதலின்போது, இந்த நாட்டின் இறையான்மையைக் காக்க நீங்கள் செயல்பட்ட விதம் மிகவும் போற்றுதலுக்குரியது.

உங்களின் வீரத்தையும் தியாகத்தையும் மெச்சுகிறோம். எதிரியிடமிருந்து வரும் எந்தவித சவாலையும் சந்திக்க தயாராக இருங்கள்” என்றார்.

இதற்கிடையே, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தலைமையில், ஒரு உயர்மட்ட சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

– மதுரை மாயாண்டி

More articles

Latest article