மிருகம் படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் ஆதி. அதைத்தொடர்ந்து ஈரம், அரவான், கோச்சடையான், மரகதநாணயம் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஆதி தடகள வீரராக நடிக்கும் படம் கிளாப். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. கதாநாயகியாக ஆகன்ஷ்கா சிங் நடிக்கிறார்.
இப்படத்தின் வாயிலாக பிருத்வி ஆதித்யா இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிப்பில் இந்த படத்தில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார். கிளாப் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பிரகாஷ் ராஜின் புகைப்படங்கள் இணையத்தை ஈர்த்து வருகிறது.