ஆசிரியர்கள் முரட்டுப்பேய்கள்!: எழுத்தாளர் பாலகுமாரன்

Must read

bala

சிரியர் தினம் குறித்து, “முக நூலில் எல்லோரும் கூவிய பின் என் பதிவை ஆசிரியர் தினம் பற்றி இடுகிறேன்” என்று துவங்கி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன்.

மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வலி மிகுந்த பதிவு அது.

அந்த பதிவு:

“ஆசிரியர் என்றால் பிரம்புதான் நினைவுக்கு வருகிறது. நான் அடி தாங்காதவன். அடி என்பது வலி மட்டுமல்ல அது அவமானப்படுத்துவதுவதும் கூட. என்னை அவமானப் படுத்த எவருக்கும் உரிமையில்லை. இது என் மூன்றாம் வகுப்பு நினைப்பு.

அடியாத மாடு படியாது. அது மாட்டுக்கடா நாயே. மாணவனுக்கல்ல.
நான் படிப்பில் மந்தமானது அவர்கள் அடித்ததால்தான். நான் மக்கு அல்ல. இதை 270 படைப்புகள் சொல்லும்.

ஆசிரியர்கள் முரட்டுப் பேய்கள். ஒருவர் கூட அன்புடன் இல்லை. இது என கர்மா. வீட்டில் தந்தை அராஜகம். தாயின் வேதனை. என் இளமைப் பருவம் முழுதும்
நெருப்பில் நடத்தல். தமிழ் பண்டிதையான தாயில்லை என்றால் கடலில் குதித்து உயிர் இழந்திருப்பேன். ஒரு முயற்சியும் செய்ததது உண்டு.
சொல்லித்தர இவர்கள் அறியாதவர்கள்

நாமே கற்போம். பதினெட்டு வயதில் முடிவு செய்து உருண்டு புரண்டு வாழ்க்கைக் கற்றேன்.

என் குழந்தைகளை நான் அடித்ததே இல்லை . காசு அதிகம் இல்லை ஆயினும் அன்பு கொட்டி வளர்த்தேன். கடும்புயல் அரைமணியில் சென்னைக் கரை தாண்டும் நான் மகள் மகன் மெரினாவுக்கு பறப்போம். சொட்டச் சொட்ட நனைந்து புயல் அனுபவிப்போம்.

மொட்டை அடிக்க மகன் வெட்கப்பட்டான் நானும் அடித்துக் கொண்டேன்.
பள்ளியிறுதிக்குப பிறகு எந்த ஆசிரியரையும் விரும்பி சந்திக்கவில்லை. சந்தித்தவரை போலி மரியாதையுடன் விலக்கியிருக்கிறேன்

என் அம்மா தமிழாசிரியை. ஆனால் அவள் எனக்கு சிநேகிதி மட்டுமே.
நல்லாசிரியர் எவரேனும் உண்டு எனில் என் பணிவான நமஸ்காரங்கள். ஒரு விண்ணப்பம். எதன் பொருட்டும் மாணவர்களை அடிக்காதீர்கள்.”

–       இவ்வாறு தனது பதிவில் பாலகுமாரன் கூறியுள்ளார்.

More articles

3 COMMENTS

Latest article