2

சென்னை:

மிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.கவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நாளை (31-ந்தேதி ) சென்னை திருவான்மியூரில் டாக்டர் வாசுதேவன்நகர் ராமசந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடக்கிறது.

கல்வி நிறுவன வளாகத்தில் அரசியல் கட்சியின் கூட்டத்தை நடத்த தடை விதிக்கக்கோரியும், சாலைகளின் ஓரத்தில் விதிமுறைகளை மீறி ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதை அகற்ற உத்தரவிடக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில், சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் செந்தில் ஆறுமுகம் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கைகளோடு டிராபிக் ராமசாமியும் வழக்கு தொடர்ந்தார்.

 

1

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கல்வி வளாகத்தில் நடைபெறும் செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது.

அதே நேரம், சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், அரசு அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளனவா என்பது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி ஐந்தாம் தேதிக்கு கோர்ட் தள்ளி வைத்துள்ளது.