அறப்போர் சந்திரமோகனை தாக்கும் தி.மு.கவினர்! வீடியோ

Must read

PhotoEditor-1451839634252
சென்னை:
கடந்த டிசம்பர் 31ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்காக சென்னையின் பிரதான சாலைகளில் எல்லாம் அ.தி.மு.கவினர் சட்டத்துக்குப் புறம்பாக பேனர்கள் வைத்ததும், அதை அகற்றிய அறப்போர் இயக்கத்தினரை அ.தி.மு.கவினர் தாக்கியதும், தாக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டதும் தெரிந்த செய்தி.
இந்த அராஜகத்தைக் கண்டித்து தி.மு.கவினரும், அதன் தலைவர் கருணாநிதியும் கண்டனம் தெரிவித்தார்கள்.
“ஆனால், அ.தி.மு.க.வினரைப் போலவேதான் தி.மு.கவினரும்” என்று ஆதாரத்துடன் சொல்கிறார்கள் அறப்போர் இயக்கத்தினர்.
“சில மாதங்களுக்கு முன்பு, சென்னை திருவான்மியூர் பகுதியில் நடைபெற்றதிமுக பொதுக்கூட்டத்துக்காகசாலையை மறித்து வைக்கப்பட்டிருந்தபேனர்களை அகற்றும்படி, அறப்போர்செயலாளர் சந்திர மோகன்காவல்துறையினரிடம் புகார்அளித்தார். அவர்கள், நடவடிக்கைஎடுக்க மறுப்பதால் தானாகவேசென்று பொது மக்களுக்குஇடையூறாக இருக்கும் பேனர்களை அகற்றினார்.
சமீபத்தில் அ.தி.மு.க.வினர் வெறிகொண்டு தாக்கியதைப்போலவே, தி.மு.கவினரும் சந்திரமோகனை தாக்கினார்கள்”  என்கிறார்கள் அறப்போர் இயக்கத்தினர்.
இதற்கு ஆதாரமாக சந்திரமோகனை தி.மு.க.வினர் தாக்கிய வீடியோவையும் வெளியிட்டு, “அதிமுக பேனர்கலாச்சாரத்தை கண்டித்து அறிக்கைஅளித்த திமுக தலைவர் கருணாநிதிஅவர்களுக்கு இந்த காணொளிசமர்ப்பணம்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சந்திரமோகனை தி.மு.க.வினர் தாக்கும் காணொளி:
https://www.facebook.com/Arappor/videos/vb.600895630049473/644055182400184/?type=2&theater
https://www.facebook.com/Arappor/videos/vb.600895630049473/644055182400184/?type=2&theater

More articles

Latest article