அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு குறித்து கண்ணீர் சிந்த மாட்டேன் : பர்கா தத்  கருத்து

டில்லி

ர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிய டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அவருடன் முன்பு பணி  புரிந்த பர்கா தத் கருத்து தெரிவித்துள்ளார்.

என் டி டி வி தொலைக்காட்சியில் பணி புரிந்து வந்தவர் அர்னாப் கோஸ்வாமி.   அவருடைய செய்தி கருத்தரங்குகள் மிகவும் காரசாரமாக இருந்ததால் அவர் மிகவும் புகழடைந்தார்.   அதே நேரத்தில் அவர் எதிராளியின் பதிலைக் கேளாமல் தனது கருத்தை உரத்த குரலில் கூறி அடுத்தவர் பேச்சை எடுபடாமல் செய்வதை பலர் எதிர்த்து வந்தனர்.

என் டி டி வி யில் இருந்து விலகிய அர்னாப் கோஸ்வாமி பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் ராஜிவ் சந்திரசேகரின் உதவியுடன் ரிபப்ளிக் டிவியை தொடங்கினார்.    இங்கும் அவர் பரபரப்புக்காக பல செய்திகளை வெளியிடத் தொடங்கினார்.  அதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த செய்திகளும் அடங்கும்.

அந்த செய்தியில்  சசி தரூரின் ஈ மெயிலில் வந்துள்ள பல செய்திகளை அவர் மேற்கோள் காட்டினார்.     சசி தரூருக்கு அனுப்பப்பட்ட ஈ மெயில்  செய்திகள் இவருக்கு எவ்வாறு கிடைத்தன என பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.   இது குறித்து அர்னாப் கோஸ்வாமி அனுமதி இன்றி சசி தரூர் ஈ மெயில் விவரங்களை திருடியதாக புகார் எழுந்தது.

இதை ஒட்டி அர்னாப் மீது கிரிமினல் வழக்கு பதிய டில்லி நீதிமன்றம் டில்லி போலிசாருக்கு உத்தரவிட்டது.   இது ஊடக உலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து என் டி டி வியில் அவருடன் பணி புரிந்த மற்றொரு புகழ்பெற்ற தொலைக்காட்சி பிரபலமான பர்கா தத், ”இவர் பல பத்திரிகையாளர்களை கெடுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.  இவரால் பலர் கைதுகளையும் வழக்குகளையும் சந்தித்துள்ளனர்.

இவர் கிரிமினல் வழக்கை சந்திப்பது குறித்து நான் கண்ணீர் சிந்த தயாராக இல்லை.   இவர் தனது பயங்கர மற்றும் சமூக விரோத செய்திகளுக்காக இந்த நடவடிக்கையை எதிர் கொள்கிறார்” என தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Arnab Goswami, Burkha dutt, criminal case, Republic tv, அர்னாப் கோஸ்வாமி, கிரிமினல் வழக்கு, பர்கா தத் கருத்து, ரிபப்ளிக் டிவி
-=-