145213911118930

சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவை விட, அதற்காக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற முயன்று கைதான அறப்போர் இயக்கத்தினர்தான் செய்திகளில் அதிகம் அடிபட்டனர். இன்று தமிழகம் முழுதும் அறப்போர் இயக்கம் பிரபலமாகியிருக்கிறது.
கைது செய்யப்பட்ட அக்தர் அகமது, ஜெயராமன், சந்திரமோகன் ஆகியோர் சென்னை புழல் சிறையில் இருக்க, அவர்களுக்குசமூகவலைதளங்களில் ஆதரவு பெருகிவருகிறது.
கைது செய்யப்பட்ட மூவருக்கும்பெயில் வேண்டி அறப்போர் இயக்கத்தினர் கோர்ட்டை அணுகினார்கள். அது குறித்த விசாரணை இன்று வந்தது. அரசு வழக்கறிஞர், காவல்துறையிடமிருந்து தமக்கு போதுமான தகவல்கள் வரவில்லை என்று கூறவே, வழக்கு நாளைக்கு (ஏழாம் தேதி) ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அறப்போர் இயக்கத்தின் பொருளாளர் நக்கீரனிடம் சில கேள்விகளை வைத்தோம்.
முக்கிய பிரச்சினை எவ்வளவோ இருக்க, பேனர்களை அப்புறப்பட்டுத்த போராட்டத்தில்இறங்குவது தேவைதானா என்ற விமர்சனம் இருக்கிறதே..

ஊழலை ஒழித்தால், ஒட்டுமொத்த சமுதாயமும் முன்னேறும் என்ற அடிப்படை நோக்கத்தில்தான் அறப்போர் இயக்கம் தொடங்கப்பட்டது. அதற்கான முயற்சிகளும் எடுத்து வருகிறோம். அதே நேரம், சட்டத்துக்குப் புறம்பாக, பேனர்களை வைப்பதும் சாதாரண குற்றம் அல்ல… அதிகார வெறியை சட்டத்தை மதிக்காத தன்மையை வெளிக்காட்டும் விதமாகத்தான்ஆளுங்கட்சியினர் சென்னை நகரம் முழுதும் சட்டத்துக்குப் புறம்பாக பேனர்களை வைத்தார்கள். இதுவும் நாம் அனைவரும்எதிர்த்து போராட வேண்டிய முக்கிய விசயம்தான்!
தவிர, எங்கள் கண் முன் எந்தத் தவறு நடக்கிறதோ, அதை எதிர்த்து கண்டிப்பாக போராடுவோம். இதில் சிறிய தவறு, பெரிய தவறு என்பதெல்லாம் கிடையாது.
பேனர்களை அகற்ற கோர்ட்டை நாடியிருக்கலாம்.. காவல்துறையில் புகார் செய்திருக்கலாம்.. நீங்களே இறங்கி பேனரை அகற்றி பரபரப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டுமா?

முதலில் சென்னை மியூஸிக் அகடமி பாலத்துக்கு அருகில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் பேனரை அகற்ற வேண்டும் என்று ராயப்பேட்டைகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு, அந்த நிலையத்தின்இன்ஸ்பெக்டர் அகற்றினார். அதனால் அவரை சஸ்பெண்ட் செய்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள்.
அபிராமிபுரம் காவல் நிலைய எல்லைக்குள் இருந்த சட்டத்துக்குப்புறம்பான பேனர்களை அகற்றச் சொல்லி, அந்த பகுதி இன்ஸ்பெக்டர் குணவர்மனிடம் , புகார் கொடுத்தபோது, புகாரை அவர் வாங்கவே இல்லை. அவர் புகாரை வாங்காததோடு, எங்களை ஆபாசமாக பேசி வெளியேற்றினார். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எல்லாம் அலைபேசியில் தொடர்புகொண்டோம். யாரும் எடுக்கவில்லை.
 
ஆகவேதான் நாங்களே பேனர்களை அகற்ற இறங்கினோம். ஏனென்றால் இதை நாம் செய்யவிலலை என்றால் வேறு செய்வார் என்கிற எண்ணம்தான்.
அறப்போர் நக்கீரன்
350 பேனர்களுக்கு அனுமதி வாங்கியிருக்கிறார்கள் என்று அரசு தரப்பு உயர்நீதிமன்றத்தில் நேற்று சொல்லியிருக்கிறதே!
350 பேனருக்கு அனுமதி வாங்கிக்கொண்டு மூவாயிரத்துக்கும்மேற்பட்ட பேனர்களை சட்டத்துக்குப் புறம்பாக சென்னை முழுதும் வைத்திருக்கிறார்கள். பேனர்வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர்தான் அனுமதி தரணும். ஒவ்வொரு பேனருக்கும் ஒரு எண் தருவார்கள். அந்த எண்ணை பேனரில் குறிப்பிட வேண்டும். ஆனால் அந்த எண் இல்லாமல்தான் ஆயிரக்கணக்கான பேனர்களை வைத்திருக்கிறார்கள். அதாவது எல்லாமே சட்டத்துக்குப் புறம்பாண பேனர்கள்.
இப்போது இந்த பிரச்சினையை எப்படி கையாளப்போகிறீர்கள்..?

சட்டத்துககுப் புறம்பாக வைக்கப்பட்ட பேனர்களைத்தான் அகற்றினோம். ஆகவே எங்களது செயல் சட்டப்படி சரியே. தவிர,அந்த பேனர்களை பொதுச் சொத்து என்று வழக்கில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவை, அ.தி.மு.க. என்றகட்சிக்குச் சொந்தமானதே தவிர, பொதுச் சொத்து அல்ல. ஆகவே வழக்கே தவறு.
 .
எங்களை தாக்கிய அ.தி.மு.க.வினர் மீது புகார் கொடுத்தபோதும் காவல் நிலையத்தில் வாங்கவில்லை. ஆகவே பதிவு தபாலில், மயிலை காவல் நிலையஇன்ஸ்பெக்டருக்கும் கமிசனருக்கும் அநுப்பினோம். இதை வைத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போகிறோம்.  எங்களை தாக்கிய அ.தி.மு.க. குண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எங்கள் புகாரை வாங்கா காவல் துறையினர் மீதும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடருவோம்.
ஊழலை ஒழிக்க போராடுவதாகக் கூறினீர்களே…. அது தொடர்பாக எந்த மாதிரி போராட்டங்களை நடத்தி வருகிறீர்கள்?

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால், இந்த அமைப்பு தன்னிச்சையாக செயல்படக்கூடியது.  கர்நாடக மாநிலத்தில் ஊழல் வழக்கில் அப்போதைய முதல்வர் எடியூரப்பா,மற்றும் மநதிரி, எம்.பியாக இருந்த ரெட்டி சகோதரர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க உதவியது இந்த சட்டம்தான்.
இந்தியாவில் தமிழகம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் மட்டும்தான் இந்த சட்டம் இல்லை..நாகாலாந்தில் சட்டமன்றத்தில் இதற்கான சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அங்கு விரைவில் வந்துவிடும்.
ஆனால் தமிழ்நாட்டில் இதை வரவிடாமல் ஆளும் கட்சியினர் தடுக்கிறார்கள். இதற்காக வழக்கு தொடுக்கப்பட்ட போது, “ மத்திய அரசு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்போகிறது. அது வந்தவுடன் மொத்தமாக தமிழகத்தில் அமல் படுத்துவோம்” என்றது ஆளும்கட்சி.
இந்த லோக் ஆயுக்தா சட்டத்தைஉடனடியாக கொண்டுவரவேண்டும் என்று போராடி வருகிறோம். கடந்த ஆகஸ்ட் 22ம்தேதிதான் எங்கள் அமைப்பு துவங்கப்பட்டது. அக்டோபர் 31ம் தேதி, லோக் ஆயுக்தாவுக்காக கவன ஈர்ப்பு நடைபயணம் மேற்கொண்டோம்.
இப்போது சட்ட முன்மாதிரி தயாரித்துக்கொண்டிருக்கிறோம்.இந்த குழுவுக்கு தலைமை வகிப்பவர், கர்நாடகா லோக் ஆயுக்தாவுக்கு தலைமை வகித்த ஜஸ்டிஸ் சந்தோஷ் ஹெக்டேதான. இவர்தான் எடியூரப்பாவுக்கும்ரெட்டி சகோதரர்களக்கும் தண்டனை கிடைக்க காரணமாக இருந்தவர்.
இந்த சட்டத்தின் முன் மாதிரியை இந்த மாதத்திற்குள் வெளியிடுவோம். இடையில் வெள்ளம் வந்துவிட்டது. அதற்கான நிவாரணத்தில் தீவிரமாக இயங்கினோம். பிறகு பேனர் விவகாரம்.
உங்கள் அமைப்பினரை விடுவிக்கச் சொல்லி தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதை, உங்கள் முகநூல் பக்கத்தில் பதிந்தீர்கள். இதைவைத்து உங்களை தி.மு.க. ஆதரவாளர்கள் என்கிறார்களே..

நாங்கள் எந்த கட்சிக்கம் ஆதரவாளர்கள் அல்ல. எங்கள் அமைப்பினர் மூவரை அநியாயமாக சிறையில் தள்ளியிருக்கிறதுஅரசு. இந்த நிலையில் எங்களுக்கு ஆதரவு தருவதை வரவேற்கத்தானே செய்வோம். தவிர, கருணாநிதி கூறியதே ஒரு வாக்குமூலம் போலத்தான். நாளை தி.மு.க.வினர் இதே போல சட்டத்துக்குப் புறம்பாக பேனர்கள் வைத்தால், “ஏற்கெனவே உங்கள் தலைவர் பேனர்களுக்கு எதிராக பேசினாரே.. இப்போது வைக்கிறீர்களே” என்று கேட்க வசதியாக இருக்குமே.
தவிர திருவான்மியூரில் சட்டத்துக்குப் புறம்பாக தி.மு.க.வினர் வைத்தை பேனரை நாங்கள் அகற்றியபோதும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த சந்திர மோகன் தாக்கப்பட்டார். ஆக, நாங்கள்எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது
வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் அமைப்பு போட்டியிடுமா?

எந்தக் காலத்திலும் நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம். நாங்கள் பொலிடிகல் பிரசர் குரூப். யாரையும் ஆதரித்தும் பேச மாட்டோம்.
உங்களது இயக்கத்தின் முக்கியபொறுப்பாளர்கள் அனைவரும் ஆம் ஆத்மில் மாநில பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்தானே. அங்கிருந்து ஏன் பிரிந்தீர்கள்?
அறப்போர் இயக்கத்தை கடந்த வருடம்5 ஆகஸ்ட் 22ம் தேதி ஆரம்த்தோம். ஏற்கெனவே அன்னா அசாரே, “இண்டியா அகெய்ன்ஸ்ட் கரப்சன்” அமைப்பில் இயங்கினோம். அதன் தமிழகத்தில் பொறுப்பாளர்களாக இருந்தோம். அதிலேருந்துதான் ஆம் ஆத்மி வந்தது. அதிலும் பொறுப்பாளர்களாக இருந்தோம்.
ஆனால் ஆம்ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவா் சரியில்லை. அவர் டில்லி அரசியலுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் தருகிறார். தமிழகத்தை பொருட்படுத்துவதே இல்லை.
பா.ஜ.க எப்படி இந்திக்காரர்கள் கட்சியா இருக்கிறதோ அதே போலத்தான் ஆம் ஆத்மியும்.
ஒரு உதாரணம் சொல்கிறேன் தமிழக அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான ஊழல் வழக்கு வந்தது. அவரதுதுறையின் ஊழியர், அக்ரியின் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்டார். அந்த சமயத்தில், ஆம் ஆத்மியில் இருந்த நாங்கள், அக்ரி கிருஷ்ண மூர்த்தியின் வீட்டுக்குள் பார்ட்டியோ, அதே மாதிரித்தான் ஆம் ஆத்மியும். தவிர ஆம் ஆத்மியில் இருந்தப்போ அக்ரி கிருஷ்ண மூர்த்தி மீதான ஊழல் வழக்கு வந்தது. அவரால் ஒரு அரசு ஊழியல் தற்கொலை செய்துகொண்டார். அப்போது அக்ரி, கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக பதவியை விட்டு விலக்க வேண்டும் என்று கோரி, அப்போதைய முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீட்டு முன்பு போராட்டம் நடத்தி, ஐம்பது பேர் கைதானோம். சமீப காலத்தில் ஐம்பது பேர் கைதாவது அந்த சமயத்தில்தான்.
ஆனால் இது குறித்து கெஜ்ரிவால் எந்தவித கண்டன அறிக்கையும் கொடுக்கவில்லை.
இத்தனைக்கும் அப்போது தமிழ்நாடு ஆம் ஆத்மியின் மாநில குழுவில் இருந்த ஏழு பேரில் ஐந்து பேர் கைதானார்கள். ஆனால் கட்சித் தலைமை இதை பொருட்படுத்தவே இல்லை.
ஆம்ஆத்மி என்பது தமிழகத்துக்கானது அல்ல என்பதை உணர்ந்தே அதிலிருந்து விலகி, அறப்போர் இயக்கத்தைத் துவக்கினோம்.
ஆம்ஆத்மி கட்சி, நக்சலைட்டுகளுக்கு அனுசரனையா செயல்படுகிறது என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.அதிலிருந்து வந்த நீங்கள், பேனர் கிழிப்பு என்று தடாலடியாக இறங்குகிறீர்கள். நீங்களும், நக்சலைட்ஆதரவார்களா?

(சிரிக்கிறார்) எங்களைப்பார்த்தா நக்சலைட் மாதிரியா இருக்கு?
பேட்டி: டி.வி.எஸ். சோமு