அயோத்தி தசரதன் மகன் ராமனிடம் அபராதம் வசூலித்த கேரள போலிஸ்

Must read

திருவனந்தபுரம்

கேரளாவில் ஒருவர் தசரதன் மகன் ராமன் எனப் போலி பெயர் கொடுத்து காவல்துறையிடம் அபராதம் கட்டி உள்ளார்.

காவல்துறையினர் வாகன சோதனை செய்யும் போது பலர் போலி பெயர் மற்றும் முகவரி கொடுப்பது வழக்கமாக உள்ளது.  ஆனால் இவ்வாறு போலி  பெயர் கொடுப்பவர்கள் சிறிது நம்பும்படியான பெயரைக் கொடுப்பது வழக்கமாகும்.   ஆனால் கேரள காவல்துறையிடம் ஒரு வாலிபர் நம்பவே முடியாத பெயர் அளித்து அபராதமும் செலுத்தி உள்ளார்.

கேரளாவில் சுமார் 2 தினங்களுக்கு முன்பு  கொல்லம் அருகே உள்ள சடையமங்கலத்தில் காவல்துறையினர் வாகன சோதனை செய்தனர்.  அங்கு சீட் பெல்ட் அணியாமல் ஒரு வாலிபர் காரில் வந்துள்ளார்.  உதவி கண்காணிப்பாளர்  அவருக்கு ரூ.500 அபராதம் விதித்துப் பெயர் மற்றும் முகவரியைக் கேட்டுள்ளார்.

அந்த வாலிபர் அலட்டிக் கொள்ளாமல் தனது பெயர் ராமன் எனவும் தந்தை பெயர் தசரதன் எனவும் ஊர் அயோத்தி எனவும் தெரிவித்துள்ளார்.  இதில் சிறிதும் சந்தகம் கொள்ளாமல் உதவி கண்காணிப்பாளர் அபராத சீட்டை நீட்டி உள்ளார்.  அந்த வாலிபருடன் வந்த மற்றொருவர் இதை ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த விடியோ காவல்துறையை ஏமாற்றிய தசரதன் மகன் ராமன் என்னும் பெயரில் வைரலாகி வருகிறது.  இதைக் காணும் மக்கள் கேரள காவல்துறையினரை மிகவும் கேலி செய்து வருகின்றனர்.

More articles

Latest article