"அம்மா" போர்டுடன் தொடரும் மருந்தகம்: குடந்தையில் தேர்தல் விதி மீறல்

Must read

IMG-20160308-WA0020
ரும் சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் கடந்த நான்காம் தேதி அறிவித்தது. அன்றுமுதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன.  இதன்படி  அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் அகற்றப்பட்டன. அம்மா உணவகங்களில் இருக்கும் ஜெயலலிதாவின் படங்களும் அகற்றப்பட்டன.
ஆனால்  கும்பகோணம் மகாமக குளம் அருகே வடக்கு வீதியில் இருக்கும், கும்பகோணம் வேளான்மை  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு உற்பத்தி சங்கத்தின் மருந்துகடையில் இன்றும் முதல்வர் ஜெயலலிதாவின் படம் உள்ள போர்டுதான் இருக்கிறது.
இதை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதற்கு அப் பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை  எடுக்குமா?
 – ஆர். மகேஷ், குடந்தை

More articles

Latest article