jayalalithaa 3.2
சென்னை: சென்னை ராயப்பேட்டை முதல் திருவான்மியூர் வரையிலான 12 கி.மி.,தூர சாலைகள் அம்ம நகரமாகமாறியிருந்ததை காண முடிந்தது.
இந்த சாலையில் பயணித்தவர்கள்ஒவ்வொரு அங் குலத்துக்கு தமிழகமுதல்வரை தரிசிக்கும் வகையில்ஏற்பாடுகள் தடபுடலாக இருந்தது. பேஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட்கள்போன்றவை வாகன போக்குவரத்துக்குஇடையூறாக இரு ந்தது. கட் அவுட்கள்மக்களின் வீடுகளின் வாசல்களைஅடைத்தவாறு அமைக்கப்பட்டிருந்தது.பேனர்களளை சேர்க்காமல் ஃபிளக்ஸ்போர்டுகள் மட்டும் ஆயிரம்வைக்கப்பட்டிருந்தது. சென்னையில்நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டததுக்குதான் இத்தகைய ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தது.
ஃபோயஸ் கார்டன் முதல் திருவான்மியூர்வரையிலான அனைத்து சாலைகளிலும்போஸ்டர்கள் ஒட்டப்படிருந்தது. எங்குபார்த்தாலும் அம்மா தான். சாலைகளின்இருபுறமும், மத்தியில் உள்ளசுவர்களிலும் அம்மா தான்.ஃப்ளாட்பாரங்களையும் ஆக்ரமித்துவைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ்போர்டுகளால் பாதசாரிகள் மிகவும்அவதிப்பட்டனர். ஒரு சில மீட்டர்களுக்குஒரு குழு போலீசார் நியமிக்கப்பட்டு,போக்குவரத்தை திருப்பி விட்டுக்கொண்டிருந்தனர். இதனால் பலசாலைகள் போக்குவரத்து நெருக்கடிக்குஆளானது.
மத்திய கைலாஷ் மற்றும் அடையாறில்அமைக்கப்பட்டிருந்த இரு வரவேற்புஆர்ச்கள், போக்குவரத்துக்கு பெரும்இடையூறாக இருந்ததை காண முடிந்தது.அதிகபட்சமாக ஐந்து இடங்களில் மூன்றுதளத்திற்கான உயரத்தில்ஜெயலலிதாவின் கட் அவுட்கள்அமைக்கப்பட்டிருந்தது. மேலும், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு பலதடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பொதுக்குழு நடந்து.. அதனால் மக்கள் துயரை அனுபவித்து ஒரு சில நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் தேர்தில் வரை இதை சென்னை மக்கள் மறக்கமாட்டார்கள்.. வெள்ள பாதிப்பைப்போலவே!.