அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நவ் 8, இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்காவில் தேர்தல் தொடங்கவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார், ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளின்டன் போட்டியிடுகிறார். மொத்தம் 538 வாக்காளர்களில், 435 பிரதிநிதிகளும் 100 செனட்டர்களும் உள்ளனர். டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா மாவட்டத்திற்கு மூன்று கூடுதல் வாக்காளர்களும் உள்ளன. வாக்குகளில் அறுதிப் பெரும்பான்மையான 270 பெறும் கட்சியின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களை, மக்கள் வெற்றிபெறச்செய்கின்றனர்.
ஒரு மாநிலத்தில், ஒரு கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்றால், அந்த கட்சியே மொத்த வாக்காளர்களையும் வென்றதாகும், இதையே “வின்னர் டேக்ஸ் ஆல்” என்கின்றனர். இதுவரை நடந்த கருத்துக் கணிப்பின்படி ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டன் 216 வாக்காளர்களையும், குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் 168 வாக்காளர்களையும் பெற்றதாக கூறப்படுகிறது. மக்கள் இதுவரை 158 வாக்காளர்களை சரியாக முடிவு செய்யவில்லை.
americanelection2016
<படம் – வாஷிங்டன் டைம்ஸ்>
கீழ்காணும் மாநிலங்கள் சிலவற்றின் தேர்தல் முடிவே, அமெரிக்காவின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கப்போவதாக தெரிகிறது. அவை நெவாடா, அரிசோனா, நியூ மெக்ஸிகோ, கொலராடோ, புளோரிடா, ஜோர்ஜியா, வடக்கு கரோலினா, விர்ஜினியா, பென்சில்வானியா, ஓஹையோ, மிச்சிகன், மற்றும் நியூ ஹம்ஷயிற்.
இறுதி முடிவைத் தெரிந்துகொள்ள, பத்திரிக்கை.காமில் தொடர்ந்து அமெரிக்க தேர்தல் செய்திகளைப் படியுங்கள்.