அதிமுக தொண்டர்களுக்குள் மோதல்: மண்டை உடைப்பு

Must read

 
admk
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக பூத் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வார்டு செயலாளர் தங்கவேலு, அதே பகுதியைச் சேர்ந்த கட்சியின் பிரதிநிதி சுசீலாவை அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தங்கவேலு மீது சுசீலாவின் ஆதரவாளர்கள் திடீரென நாற்காலிகளை தூக்கி வீசி தகறாரில் ஈடுபட்டனர். பதிலுக்கு தங்கவேலு ஆதரவாளர்கள் சுசீலா மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்கினர். இதில் சுசீலாவின் அண்ணன் சோமசுந்தரத்தின் மண்டை உடைந்தது.
இருதரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இருதரப்பினரையும் கட்சியினர் சமாதானம் செய்தனர். படுகாயம் அடைந்த சோமசுந்தரம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article