அதிமுகவில் 10 வேட்பாளர்கள் மாற்றம்- புதிய வேட்பாளர்கள் விபரம்

Must read

anna
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நேற்று முன்தினம்(திங்கட்கிழமை) வெளியிட்டார்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்களில் 10 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தியாகராய நகர், நாகர்கோவில் உள்ளிட்ட 10 தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக புதிய வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய வேட்பாளர்கள் விவரம்:
மேட்டூர் – செம்மலை,
தியாகராய நகர் – சத்திய நாராயணன்,
நாகர்கோவில் – நாஞ்சில் முருகேசன்,
வேதாரண்யம் – ஓ.எஸ்.மணியன்,
மன்னார்குடி – எஸ்.காமராஜ்,
பூம்புகார் – பவுன்ராஜ்,
திருபுவனை – சங்கர்,
காட்டுமன்னார் கோவில் – முருகுமாறன்
காரைக்கால் தெற்கு – அசனா
திருநள்ளாறு – முருகையன்

More articles

Latest article