சென்னை:
மிழகத்தில் அடுத்த பொது முடக்கத்துக்கு வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகி வருகிறது. சென்னையிலும்  நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தோல்வியை சந்தித்து உள்ளது.
ஊரடங்கு இருக்கும்போதே, சென்னையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கொரோனாவின் தாக்கமும் பரவி வருகிறது. இதன் காரணமாக சென்னையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில்,  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன்,  ‘தற்போதுள்ள சூழ்நிலை நீடித்தால், மேலும் சில தளர்வுக்காலுடன் அடுத்த பொதுமுடக்கத்திற்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.