12241656_1172475106113397_4337340489601044476_n

ப்பு செய்தவனை தனியாக அழைத்து கண்டிக்க வேண்டும் என்பார்கள். பலர் முன்னால் கண்டித்தால் அவனுக்கு அவமானம் ஆகிவிடுமாம்.

நிறைய பேரை வேலை வாங்கும் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மேற்படி கருத்தை ஆமோதிப்பார்களா என்று தெரியவில்லை.

பாராட்டும் கண்டனமும் வெளிப்படையாக இருப்பது நல்லது என்பதை அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். ஒருதலை பட்சம் கூடாது; தனிப்பட்ட வன்மம் கூடாது. அவ்வளவுதான்.

நல்லது செய்தால் தலைவர் தட்டிக் கொடுப்பார் என்பதும்; தப்பு செய்தால் தட்டிக் கேட்பார் என்பதும் உடன் பணியாற்றும் எல்லோருக்கும் தெரிய வேண்டும். அதுதான் அவர்களுக்கும் நல்லது, நிறுவனத்துக்கும் நல்லது.

தப்பு செய்தவனை அறைக்குள் அழைத்து கண்டிக்க ஆரம்பித்தால், ஒரே (மாதிரி) தப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் தலையில் குட்ட வேண்டியிருக்கும். வெறுத்துப் போகும்.

எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்கிறோம். இது மட்டும் சிவாஜி பட ஸ்டைலில் ரூமுக்குள் நடக்க வேண்டுமா?

சில தலைவர்கள் அப்படியும் செய்கிறார்கள். அல்லது வெளிப்படையாக எதையும் காட்டிக் கொள்ளாமல், சம்மந்தப்பட்ட நபரை அமைதியாக கட்டம் கட்டி விடுவார்கள். ஏன் அப்படி என்று கடைசி வரை யாருக்கும் தெரியாது.

இந்த நேரத்தில் இதை சொல்ல காரணம், கேப்டன்.

நாகரிகவாதிகள் குறை சொல்கிறோம். ஆனால் ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கவுன்டெல்லாம் இல்லாத ஜனங்கள் கேப்டனின் நாசூக்கில்லாத இயல்பை ஆட்சேபிப்பதாக தெரியவில்லை.

நல்லவேளை, ஹைடெக் பிரசார ஐடி ஆசாமிகள் வலையில் இன்னும் விஜயகாந்த் சிக்கவில்லை.

கதிர்வேள் (முகநூல் பதிவு)